Welcome to FutureForU Literature Service!

"There is surely a future hope for you, and your hope will not be cut off." (Proverbs 23:18)

The main motive of "FutureForU Literature Service" is to reach every person individually for Christ through literature. All the articles and resources available in this blog will help its visitor to have a bright future by knowing God and his ways.

Sunday, 27 November 2022

காரியத்தின் கடைத்தொகை!

 அத்தியாயம் 8

(தேவ பக்தியுள்ள வாழ்வு!)

"ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் குமாரர்: ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்." (1 நாளாகமம் 1: 34).

ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கு, ஈசாக்கின் குமாரர்கள் ஏசா மற்றும் யாக்கோபு.  இவ்விருவரில் ஏசா அவபக்தியுள்ளவனாயிருந்தான். ஆனால் யாக்கோபு என்னும் மறுநாமமுள்ள இஸ்ரவேல் தேவபக்தியுள்ளவனாகக் காணப்பட்டான்.

ஏசாவைக் குறித்து வேதம் எபிரெயர் 12: 16, 17 ஆகிய வசனங்களில் இவ்விதமாகக் கூறுகிறது:  "ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப் போட்ட ஏசாவைப் போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையா யிருங்கள்.  ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்;  அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்."

யாக்கோபு 'எத்தன்' என்கின்ற அர்த்தமுள்ள பெயரை உடையவனா யிருந்தாலும் அவனுக்குள் தேவனுடைய ஆசீர்வாதத்தைத் தானும் தன்னுடைய சந்ததியும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிற வாஞ்சை அதிகமாய்க் காணப் பட்டது.

தன்னுடைய சந்ததி ஒரு பக்தியுள்ள சந்ததியாகக் காணப்படவேண்டும் என்பதில் அக்கறை இருந்தது.  ஆகவே, அவர் தேவன் மேல் அன்புகூர்ந்தார்; தேவனைத் தொழுதுகொள்ளவும், அவரை உண்மையாய்த் தேடவும் ஆரம்பித்தார்.

யாக்கோபுக்குப் பண்ணிரென்டு குமாரர்கள் இருந்தார்கள். இந்தப் பண்ணிரென்டு பேரும் பண்ணிரென்டு கோத்திரப் பிதாக்களாய் மாறினார்கள்.  அவர்களுடைய சந்ததி பலுகிப் பெருகி ஒரு தேசமாய் மாறினது.  அப்படி உருவானதுதான் இஸ்ரவேல் என்னும் தேசம்.

யாக்கோபைத் தேவன் ஆசீர்வதித்து "தேவனுடைய பிரபு" என்னும் அர்த்தம்கொள்ளும் இஸ்ரவேலாய் மாற்றினார். இவ்வாறாக, யாக்கோபு பலுகிப் பெருகி 'இஸ்ரவேல்' என்னும் தேசத்தின் பிதாவாய் மாறினார்.

கற்பனைகளைக் கைக்கொள்!

"காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்;  எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.  ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டு வருவார்."  (பிரசங்கி 12:13, 14)

இஸ்ரவேலர்களாகிய யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் தலைவனாகிய மோசேயின் மூலமாய் பத்துக் கட்டளைகளைத் தேவன் கொடுத்தார். அதைத்தான் கற்பனைகள் அல்லது நியாயப்பிரமாணம் என்று அழைக் கிறோம். அவையாவன:

1. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

2. யாதொரு விக்கிரத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.

3. கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.

4. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.

5. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

6. கொலை செய்யாதிருப்பாயாக.

7. விபச்சாரம் செய்யாதிருப்பாயாக.

8. களவு செய்யாதிருப்பாயாக.

9. பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

10. பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.  (யாத்திராகமம் 20: 1-17)

ஆபிரகாம் காலம் முதல் இந்நாள் வரையிலும் பூமியில் வாழ்ந்து வருகிற மனுமக்களிடத்தில் தேவன் எதிர்பார்க்கும் ஒரு காரியம் தெய்வ பயம். மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம்மை உண்டாக்கிய தெய்வத்திற்குப் பயந்து, அவருடைய வழிகளில் நடக்க வேண்டும். 

அதற்காகத்தான் அவர் தம்முடைய வேதத்திலே கட்டளைகளையும் கற்பனைகளையும் கொடுத்திருக்கிறார். அவைகளை நாம் கைக்கொண்டு நடக்கும்பொழுது தீமை செய்கிறவர்களாய் இராமல் நன்மை செய்கிறவர்களாய்க் காணப்படுவோம். இதுவே சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா நமக்குச் சொல்லும் அறிவுரை.

வாலிபனே, உன் சிருஷ்டிகரை நினை!

"வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்;  உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றி னிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.

நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு;  இளவயதும் வாலிபமும் மாயையே."  (பிரசங்கி 11: 9,10)

"நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை..." (பிரசங்கி 12:1)

வாலிபப் பிராயத்திலே தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்னவென்றால்: சிருஷ்டிகரை நினைத்தல்.  மனிதன் தன்னுடைய இளமை (13 முதல் 19 வரையுள்ள வயது) மற்றும் வாலிபம் (20 முதல் 39 வரையுள்ள வயது) ஆகிய பருவங்களிலேயே தன்னுடைய சிருஷ்டிகரை அறிந்துகொள்ள வேண்டும், நினைக்கவேண்டும்.

தேவன் சிருஷ்டிகர் மாத்திரமல்ல, அவர் நியாயாதிபதி என்பதையும் அவன் அறிந்துகொள்ளவேண்டும்.  ஏனென்றால், தேவன் மனிதர்களாகிய நம் ஒவ்வொருவருடைய எண்ணங்கள், செயல்கள் மற்றும் வார்த்தைகளை நியாயத்தில் (நியாயத்தீர்ப்பில்) கொண்டுவந்து நிறுத்துவார், நியாயந் தீர்ப்பார். 

இந்த உலகம் ஏற்கனவே ஒருமுறை நியாயந் தீர்க்கப்பட்டு ஜலத்தினால் அழிக்கப்பட்ட ஒன்று என்பதை நாம் ஒருநாளும் மறந்துவிடவே கூடாது.  இன்னொருமுறை இந்த உலகம் நியாயந் தீர்க்கப்பட்டு மிகப்பெரிய அழிவைக் காணப்போகிறது.  அந்த அழிவு தண்ணீரினால் அல்ல, நெருப்பினால் (அக்கினியினால்) நடக்கப்போகிறது. ஆகவே, தெய்வபயத்தோடு நடந்துகொள்ளுவோம்; தேவனுடைய கற்கனைகள் யாவையும் கைக்கொள்ளுவோம்.  இதுவே நம் ஒவ்வொருவரிடமும் தேவன் எதிர்பார்க்கும் காரியம்; இதுவே காரியத்தின் கடைத்தொகை.

Abraham - The Father of a Godly Generation!

Chapter 7

(How to Lead a Life of Godliness?)

Born in the godly generation, Abraham was called by God to go to a country not known to him. When God called him Abraham had no children. But he obeyed God and started his journey to a foreign land.


"The Lord said to Abraham: Leave your country and your kindred and your father's house and go to the land that I will show you.

I will make thee a great nation, and bless thee, and glorify thy name; You will be blessed.

I will bless those who bless you, and curse him who curses you; All the families of the earth shall be blessed in you." (Genesis 12:1-3)

When God called Abraham, he was living in a town in the land of the Chaldean. God called him from there and told him to go to a land that he would show him. Abraham immediately obeyed God. That is, he showed his faith in God in his actions. So he was found righteous before God. And he became a father to all who believe in God like him.

When God called Abraham, he was 75 years old. Abraham believed the promise God gave him when he was called. He did not see his age or his childlessness. He believed that everything would be possible through God who called him.

God tested Abraham's faith; many years have passed since he received the promise from God for a child. However, no child was born to Abraham-Sarah couple. Even in this situation, Abraham did not abandon his faith. He got strengthened in his faith and trusted God and his word firmly.

Isaac and Jesus Christ!

When Abraham was 100 years old, God gave him a son as He promised him. The child was named 'Isaac'. Isaac means 'laughter', because the birth of Isaac brought laugh to the people around them due to the fact that Isaac was born to Abraham and Sarah at their very old age.

Isaac became a blessing to his parents as well as to his neighbors as his name suggests. Yes, our God not only utters a promise, but He also fulfills what He says.

God blessed Abraham in every way. He had many goats, cows, silver and gold. There were more than 300 servants born in his house alone.

It was in this Abraham's seed that many pious and righteous people appeared; Great kings and wise men appeared. Not only that, it was in his genealogy, God himself appeared in the form of a man in the name of 'Jesus'. He was the one who divided world history into two (BC and AD). He made redemption for the entire human race. He was the One who brought blessings to this entire world.

Jesus Christ - The way to godly life!

It is written in Scripture that "...without the shedding of blood there is no forgiveness" (Hebrews 9:22). After the flood, sacrifices continued until the days of Jesus Christ. That is, the blood of the sheep was shed as a symbol (shadow) of the blood of Jesus Christ. But, about 2020 years ago, Jesus Christ incarnated as a man, did many good things for the people during his earthly ministry three and a half years, and sacrificed himself on the cross and shed his own blood.

Scripture says, "...the blood of Jesus Christ cleanses us from all sin" (1 John 1:7). Jesus Christ is a sinless and spotless lamb of God. Therefore, His blood is sinless and holy before the sight of God. It is in His blood that was shed for us that we have redemption and the forgiveness of sins.

Only if our sins are forgiven, we can go and live in Moksha called Heaven. Lord Jesus is the one who forgives us from all our sins. He expects us to confess our sins to Him and ask for His forgiveness. Then our sins will be forgiven; Heavenly joy will fill us. Amen!

Friday, 7 October 2022

ஆபிரகாமின் சந்ததி!

தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியிலே பிறந்து, தேவனால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டவர்தான் ஆபிரகாம்.  தேவன் அவரை அழைத்தபொழுது அவருக்குப் பிள்ளைகள் இல்லை. ஆனால் அவரிடத்தில் பக்தி இருந்தது.

"கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. 

நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்." (ஆதியாகமம் 12: 1-3)

ஆபிரகாமைத் தேவன் அழைத்த பொழுது, அவர் கல்தேயருடைய தேசத்திலுள்ள ஒரு ஊரிலே வசித்து வந்தார். தேவன் அவரை அங்கிருந்து அழைத்துத் தான் காண்பிக்கும் தேசத்துக்குப் போகும்படிக் கூறினார். உடனே ஆபிரகாம் தேவனுக்குக் கீழ்படிந்தார். அதாவது தான் தேவன்மேல் வைத்திருந்த விசுவாசத்தைத் தன் கிரியையில் (செயலில்) காண்பித்தார். அதினால் அவர் தேவனுக்கு முன்பாக நீதிமானாகக் காணப்பட்டார். மேலும், அவர், தன்னைப்போல் தேவனை விசுவாசிக்கும் அனைவருக்கும் தகப்பனாகவும் மாறினார். 

தேவன் ஆபிரகாமை அழைத்தபொழுது, அவருக்கு 75 வயதாயிருந்தது. ஆபிரகாம் தேவன் சொன்ன வார்த்தைகளை நம்பினார், விசுவாசித்தார். தன்னுடைய வயதையோ, தான் குழந்தையற்றவனாய் இருக்கிற நிலையையோ அவர் பார்க்கவில்லை.  தன்னை அழைத்த தேவனால் எல்லாம் கூடும் என்று விசுவாசித்தார்.

தேவன் அந்த விசுவாசத்தைச் சோதித்துப் பார்த்தார். 25 ஆண்டுகள் கடந்துபோனது. என்றாலும், ஆபிரகாம்- சாராள் தம்பதியினருக்குக் குழந்தை பிறக்கவில்லை. இந்த சூழ்நிலையிலும், ஆபிரகாம் தன்னுடைய விசுவாசத்தை விட்டுவிடவில்லை. அதிலே பலப்பட்டார்.

ஈசாக்கும், இயேசு கிறிஸ்துவும்!

ஆபிரகாம் 100 வயதானபோது, தேவன் அவருக்கு வாக்குப்பண்ணினபடியே ஒரு குமாரனைக் கொடுத்தார். அவனுக்கு 'ஈசாக்கு' என்று பெயரிடப்பட்டது. ஈசாக்கு என்றால் 'நகைப்பு' என்பது பொருள். ஆபிரகாம்-சாராள் என்கிற தாத்தாவுக்கும், பாட்டிக்கும் குழந்தையாக ஈசாக்கு பிறந்திருந்ததால் அது ஜனங்களுக்கு நகைப்பாயிருந்தது.

ஈசாக்கு தன் பெயருக்கேற்ப தன் பெற்றோருக்கும், உற்றாருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கிறவராயிருந்தார். ஆம், நம் தேவன் வாக்குப்பண்ணுகிறவர் மட்டுமல்ல, தான் சொன்னதைச் செய்ய வல்லவரும், உண்மையுள்ளவருமாய் இருக்கிறார்.

ஆபிரகாமைத் தேவன் சகலவிதத்திலும் ஆசீர்வதித்திருந்தார். அவர் ஒரு சீமானாயிருந்தார். அவருக்கு அநேக ஆடு, மாடுகளும், வெள்ளியும், பொன்னும் இருந்தது. அவருடைய வீட்டில் பிறந்த வேலைக்காரர்கள் மாத்திரம் 300க்கும் அதிகமானவர்கள். 

இந்த ஆபிரகாமுடைய சந்ததியில்தான் அநேக பக்திமான்களும், நீதிமான்களும் தோன்றினார்கள்; தலை சிறந்த ஞானிகளும், விஞ்ஞானிகளும் தோன்றினார்கள்; பெரிய பெரிய இராஜாக்கள் தோன்றினார்கள்.  அதுமாத்திரமல்ல, இவருடைய சந்ததியில்தான் தேவாதி தேவன் தாமே மனுஉருக்கொண்டு 'இயேசு' என்ற பெயரில் தோன்றினார். அவரே உலகச் சரித்திரத்தை இரண்டாகப் (கி.மு.-கி.பி.) பிரித்தவர். முழு மனுவர்க்கத்திற்கும் பாவமன்னிப்பாகிய மீட்பை உண்டுபண்ணினவர். இந்த முழு உலகத்திற்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டு வந்தவர்.

பக்தி வாழ்க்கைக்கு வழி - இயேசு!

"... இரத்தஞ் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது" (எபிரெயர் 9:22) என்று வேதத்தில் எழுதியிருக்கிறது. ஜலப்பிரளயத்திற்குப் பின், இயேசு கிறிஸ்துவின் நாட்கள் வரையிலும் பலிகள் செலுத்தப்பட்டு வந்தன. அதாவது, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு அடையாளமாக (நிழலாக) ஆடுமாடுகளின் இரத்தம் சிந்தப்பட்டது. 

ஆனால், சுமார் 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்து மனிதனாக அவதரித்து, மூன்றரை ஆண்டுகள் தன்னைத் தேடிவந்த மக்களுக்கு அநேக நன்மைகளைச் செய்து, சிலுவை மரத்தில் நமக்காகப் பலியாகித் தன் சொந்த இரத்தத்தைச் சிந்தினார்.

"...இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்" (1 யோவான் 1:7) என்று வேதம் சொல்லுகிறது.  இயேசு கிறிஸ்து பாவமே செய்யாத பரிசுத்த தேவன். ஆகவே, அவருடைய இரத்தம் பாவமில்லாத பரிசுத்த இரத்தம். நமக்காகச் சிந்தப்பட்ட அவருடைய இரத்தத்தில்தான் பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. 

நாம் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டால் மட்டுமே, நாம் சொர்க்கம் என்கிற மோட்சத்திற்குள் சென்று வாழமுடியும். பாவங்களை மன்னிக்கிறவர் ஆண்டவர் இயேசு ஒருவர்தான். அவரிடம் நாம் நம் பாவங்களைச் சொல்லி மன்னிப்புக்கேட்டு, அவற்றை விட்டுவிடவேண்டும். அப்போது நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும்; பரலோக சந்தோஷம் நம்மை நிரப்பும். ஆமென்!

Monday, 11 July 2022

The Great Flood on Earth!

Chapter 6!

(Leading a Life of Godliness!)

God, who wanted to save Noah and his family from the great destruction of the flood, ordered him to make an ark (ship) out of the copra tree. It was the first ship built on the face of the earth. But people laughed at it. They neither repented of their sinful habits nor sought after God who made them.

Noah's grandfather Methuselah also died (969) in the same year that Noah finished building the ark. In the same year, God brought Noah and his entire family into the ark along with all the domestic animals, all the wild animals, the birds of the air, and a few pairs of the wild animals. Then the door of the ark was closed.

God opened the floodgates of the heavens and the fountains of the depths of the earth. It rained on the earth for 40 days and nights. All the mountains and all the high peaks above the earth were covered with water.

Because of the flood, everything that lived on the earth, from man to animal life, and everything that breathed through the nostrils died. God destroyed the sinful and ungodly world with water. But he kept Noah and his entire family from perishing in the water.

The Bible says, "The Lord knows how to deliver the godly from temptation and to reserve the ungodly for the day of judgment" (2 Peter 2:9).

Yes, God saved Noah, his wife, his three sons (Shem, Ham, Japheth) and their wives (a total of 8 people) from the great flood that came on earth as a judgment. It was because of them that the people started multiplying after the flood.

After the flood!

After the flood, God blessed Noah and his sons and said: "Be fruitful and multiply and replenish the earth" (Genesis 9:1). And so their offspring began to multiply on this earth. Noah's firstborn son was Japheth; second son was Shem; and the youngest was Ham.

The first two of these were pious people. But there was some kind of ungodliness in Ham, the third son. He was ill-mannered. The sin of homosexual was found in him and in his descendants. So he was cursed by his father. A curse was on his offspring.

One of Ham's sons, Canaan, became the father of many nations. In the descendants of Canaan, the sin of homosexual was found more and more. So their cities of Sodom and Gomorrah were destroyed by fire and brimstone.

In later days, the land of Ham, Egypt and Canaan, where the descendants of Ham lived, were judged and destroyed by God. The entire land of Canaan was captured by the descendants of Shem in war and the nation of Israel was formed.

Descendant of Shem!

The Bible says, "The Lord has chosen for himself the godly..." (Psalm 4:3). Therefore, God chose Japheth and Shem who were pious and blessed them. The descendants of both of them were godly and blessed. Though the descendants of both of them - Japheth and Sahem were godly, God chose the offspring of Shem to fullfil his plan of Salvation on earth.

It was in the offspring of Shem, God himself became flesh and bron as a man as a woman's seed (virgin's womb). He wanted to take upon Himself the sin of the entire human race and make the whole world a pious offspring. Yes, he is the Lord and Savior Jesus Christ.

Shem's offspring was chosen by God to be godly and blessed among the people who lived on earth after the flood. As days went by and times changed, true godliness began to decline in that generation as well. Man started resorting to shortcuts to attain godliness.

Idolatry began to enter into the godly life of descendants of Shem. Man forgotten the God who created him and started seeking foreign gods; he made gods for himself. It was at such a time that a devotee named Abraham was born in the 9th generation of Shem's descendants.

Sunday, 10 July 2022

ஜலப்பிரளயம் - ஓர் நியாயத்தீர்ப்பு!

அத்தியாயம் 6

(தேவ பக்தியுள்ள வாழ்வு!)

நோவாவையும்¸ அவருடைய குடும்பத்தையும் பெரிய அழிவாகிய ஜலப்பிரளயத்திலிருந்து காப்பாற்ற நினைத்த தேவன்¸ பேழை (கப்பல்) ஒன்றைக் கொப்பேர் என்னும் மரத்தால் உண்டுபண்ண அவனுக்குக் கட்டளை கொடுத்தார். அதுதான் முதன் முதலில் கட்டப்பட்ட கப்பல்.  ஆனால்¸ ஜனங்களோ அதைப் பார்த்து நகைத்தனர்.  அவர்கள் தங்கள் பாவப் பழக்க வழக்கங்களை விட்டு மனந்திரும்பி¸ தங்களை உண்டாக்கின தேவனைத் தேட மனதில்லா திருந்தார்கள்.


நோவா பேழையைக் கட்டி முடித்த அந்த வருடத்தில் தானே அவருடைய தாத்தா மெத்தூசலாவும் (969) மரணமடைந்தார்.  அதே வருடத்தில்¸ தேவன் நோவாவையும்¸ அவருடைய முழுக் குடும்பத்தையும்¸ அவர்களோடுகூட சகல நாட்டு மிருகங்களிலும்¸ சகல காட்டு மிருகங்களிலும்¸ ஆகாயத்துப் பறவைகளிலும்¸ ஊரும் பிராணிகளிலும் ஒரு சில ஜோடிகளை பேழைக்குள் பிரவேசிக்கப்பண்ணினார். அதன்பின்பு பேழையின் கதவு அடைக்கப்பட்டது.

தேவன் வானத்தின் மதகுகளையும்¸ பூமியின் ஆழத்தின் ஊற்றுக் கண்களையும் திறந்துவிட்டார். 40 நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் மழை பெய்தது.  பூமியின் மேலுள்ள சகல மலைகளும்¸ உயரமான சகல சிகரங்களும் தண்ணீரால் மூடப்பட்டன.

ஜலப்பிரளயத்தினால் பூமியில் வாழ்ந்த மனிதன் முதல்¸ மிருக ஜீவன்கள் வரையிலும்¸ நாசியில் சுவாசமுள்ள யாவும் மாண்டுபோயின.  பாவம் நிறைந்த¸ அவபக்தியுள்ள உலகத்தைத் தேவன் தண்ணீரினால் அழித்தார். ஆனால்¸ நோவாவின் சந்ததியையோ தண்ணீரில் அழியாமல் காத்தார்.

வேதம் சொல்லுகிறது¸ “கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையி னின்று இரட்சிக்கவும்¸ அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்” (2 பேதுரு 2:9) என்று.

ஆம்¸ ஜலப்பிரளயம் என்னும் நியாயத்தீர்ப்பிலே தேவன் நோவாவையும்¸ அவன் மனைவியையும்¸ அவன் மூன்று குமாரரையும் (சேம்¸ காம்¸ யாப்பேத்)¸ அவர்கள் மனைவிமார்களையும் (மொத்தம் 8 பேர்) காப்பாற்றினார். அவர்களாலே ஜலப்பிரளயத்திற்குப் பின்பு ஜனங்கள் பெருகத் தொடங்கி னார்கள்.

ஜலப்பிரளயத்திற்குப் பின்!

ஜலப்பிரளயத்திற்குப் பின்பு¸ தேவன் நோவாவையும் அவன் குமாரரையும் ஆசீர்வதித்து:  “நீங்கள் பலுகிப் பெருகி¸ பூமியை நிரப்புங்கள்” (ஆதியாகமம் 9:1) என்று சொல்லி ஆசீர்வதித்தார்.  அப்படியே அவர்களுடைய சந்ததி இந்தப் பூமியிலே பெருகத்தொடங்கியது.  நோவாவுடைய மூத்த குமாரன் யாப்பேத்¸ இரண்டாவது குமாரன் சேம்; இளையவன் காம்.

இவர்களில் முதல் இரண்டு பேரும் பக்தி உள்ளவர்களாய் இருந்தார்கள்.  ஆனால்¸ மூன்றாவது மகனாகிய காமுக்குள்ளே ஒருவித அவபக்தி காணப்பட்டது.  அவன் கெட்டநடக்கை உள்ளவனாயிருந்தான். ஆண் புணர்ச்சியாகிய பாவம் அவனிடத்திலும் அவன் சந்ததியினிடத்திலும் காணப்பட்டது. அதினால் அவன் தன் தகப்பனால் சபிக்கப்பட்டான். அவனுடைய சந்ததியில் சாபம் இருந்தது.

காமின் குமாரர்களில் ஒருவனாகிய கானான் பல ஜாதிகளுக்குத் தகப்பனானான்.  இந்தக் கானானுக்குள்ளும் அவன் சந்ததியாருக்குள்ளும் ஆண்புணர்ச்சியாகிய பாவம் மலிந்து கிடந்தது.  ஆகவே அவர்கள் வாழ்ந்த பட்டணங்களாகிய சோதோம்¸ கொமோரா ஆகியவை அக்கினியினாலும் கந்தகத்தினாலும் அழிக்கப்பட்டன.  பின் நாட்களில் காமின் சந்ததியார் வாழ்ந்து வந்த காமின் தேசமாகிய எகிப்து¸ மற்றும் கானான் முதலியன தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டு அழிவைக் கண்டன.  கானான் தேசம் முழுவதும் சேமின் சந்ததியாரால் யுத்தத்தில் பிடிக்கப்பட்டு இஸ்ரவேல் என்னும் தேசம் உருவானது.

சேமின் சந்ததி!

பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்து கொண்டார்...” (சங்கீதம் 4:3) என்று வேதம் சொல்லுகிறது.  ஆகவே¸ பக்தியுள்ளவர்களாகிய யாப்பேத்தையும்¸ சேமையும் தேவன் தெரிந்துகொண்டார்.  அவர்களை ஆசீர்வதித்தார்.  அவர்கள் இரண்டு பேருடைய சந்ததியுமே ஆசீர்வதிக்கப்பட்ட¸ பக்தியுள்ள சந்ததிகள்தான். அதிலும் தேவன் ஒரு சந்ததியை விசேஷமாகத் தெரிந்தெடுத்தார்.  அதுதான் சேமின் சந்ததி.

சேமின் சந்ததியில்தான் தேவாதி தேவன் மாம்சமாகி¸ ஸ்திரீயின் வித்தாகக் கன்னியின் வயிற்றில் வந்துதித்தார்.  இந்த முழு மனுக்குலத்தின் பாவத்தையும் தன்மேல் ஏற்றுக்கொண்டு¸ முழு உலகத்தையும் பக்தியுள்ள ஒரு சந்ததியாக மாற்ற விரும்பினார்.  ஆம்¸ அவர்தான் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து.

சேமுடைய சந்ததி பக்தியுள்ள சந்ததியாகவும்¸ தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாகவும் இருந்தது.  நாட்கள் செல்லச் செல்ல¸ காலங்கள் மாற மாற அந்தச் சந்ததியிலும் உண்மையான தேவபக்தி குறையத் தொடங்கியது.  தேவ பக்தியை அடைவதற்கு மனிதன் குறுக்கு வழிகளை நாட ஆரம்பித்து விட்டான்.

விக்கிரக வழிபாடு மனிதனுக்குள் நுழையத் தொடங்கியது. மனிதன் தன்னை உண்டாக்கின தெய்வத்தை மறந்து¸ அந்நிய தேவர்களை நாட ஆரம்பித்துவிட்டான்; தனக்கென தெய்வங்களை உண்டாக்கிக் கொண்டான்.  அப்படிப்பட்ட கால கட்டத்தில் தான்¸ சேமுடைய சந்ததியில் 9-ம் தலைமுறையிலே பிறந்தவர் ஆபிரகாம் என்கிற ஒரு பக்தன்.

Friday, 24 June 2022

Godly Ancestors!

 Chapter 5

(Leading a Life of Godliness!)


God gave Adam another son to replace Abel, whom Cain had killed.  His name was Seth.  Seth looked like Adam.

Seth became the father of a godly generation and Cain became the father of an ungodly generation.  Seth also had a son, whose name was Enos.  Then man began to worship the name of God.  Yes, godliness originated within human beings.

Men had easily enjoyed the presence of God until Cain killed Abel.  That is, men were able to communicate easily with God, i.e.,  God spoke to man; man also spoke to God.

But since man began to sin willfully, the presence of God had been alienated from him.  Only then did the man begin to realize his condition.

When Enos was born, human beings felt the need to search for God who had created them in His own image.  They began to worship God and started calling on His name.  When they sought after Him like that, they were able to come closer to Him.

"What other nation is so great as to have their gods near them the way the Lord our God is near us whenever we pray to him?" (Deuteronomy 4:7)

Enoch walked with God!

"When Enoch had lived 65 years, he became the father of Methuselah.

After he became the father of Methuselah, Enoch walked faithfully with God 300 years and had other sons and daughters. 

Altogether, Enoch lived a total of 365 years. 

Enoch walked faithfully with God; then he was no more, because God took him away." (Genesis 5:24-24)

Enoch was born in the fourth generation of Enos.  He was the most pious of all his ancestors.  Although Enoch was involved in family life and had sons and daughters, he had a closer walk with God.  He was pleasing in his walk with God.  So God took him out of this world without causing natural death.

It was Enoch who was taken from the earth without seeing natural death, after the death of Adam (930) and Abel (killed by his brother Cain).  After he was taken, human beings began to multiply on this earth.  Then sin and ungodliness were more prevalent among men.

Noah - A Righteous and Godly Man!

God raised a righteous and godly man in the third generation of Enoch on this earth.  His name was Noah.  Noah means Comforter.

The earth would not bear its fruit because of the curse that came after Adam's sin.  There was no rain on the earth.  Noah was born in the midst of such grief.  But, as his name implies, he brought comfort to his parents, his descendants, and the whole world.

Noah was pious and righteous among the people of that time (in the days of sin).  God was moved with remorse for the human beings whom he created, because of the depravity of men and women, and of the increase of sin.

For the sake of human beings, God decided to destroy the whole world and all living things in it by water.  But Noah found grace in the eyes of the Lord.  God didn't want to destroy him and his whole family in water to be flooded on the earth.

Many of his forefathers (the pious) died in the days of Noah.  His ancestors, from Enos (905) to Enoch (365), gone to be with the Lord during this period.  After the birth of his sons - Shem, Ham and Japheth, Noah's father Lamech (777) died.  Only Noah's grandfather Methuselah was alive.

Thursday, 23 June 2022

பக்தியுள்ள முற்பிதாக்கள்!

 அத்தியாயம் 5

(தேவ பக்தியுள்ள வாழ்வு!)


காயீன் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாகத் தேவன் ஆதாமுக்கு இன்னொரு குமாரனைக் கொடுத்தார்.  அவன் பெயர் சேத்.  சேத் ஆதாமைப்போலவே தோற்றத் தில் காணப்பட்டான்.

சேத்தின் சந்ததி ஒரு பக்தியுள்ள சந்ததியாயிருந்தது.  சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்.  அவனுக்கு ஏனோஸ் என்று பெயரிட்டார்கள்.  அப்பொழுது மனிதர் தேவனுடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.  ஆம்¸ தேவபக்தி மனிதர்களுக்குள் உண்டானது.

காயீன் ஆபேலைக் கொலை செய்வதற்கு முன்பு வரை தேவ பிரசன்னத்தை மனிதன் எளிதாக அனுபவித்து வந்தான்.  அதாவது தேவனோடு மனிதனால் எளிதாகத் தொடர்புகொள்ள முடிந்தது.  தேவன் மனிதனோடு பேசினார்; மனிதனும் தேவனோடு பேசினான். 

ஆனால்¸ மனிதன் துணிகரமாகப் பாவங்களைச் செய்ய ஆரம்பித்தது முதல் தேவசமூகம் அவனுக்குத் தூரமாக்கப்பட்டது.  அப்பொழுதுதான் மனிதன் தன் நிலையை உணர ஆரம்பித்தான்.

ஏனோஸ் பிறந்தபொழுது¸ மனிதனுக்குள் தன்னை உண்டாக்கின தேவனையும்¸ அவருடைய சமூகத்தையும் தேட வேண்டும் என்கிற உணர்வு உண்டானது.  அப்பொழுது அவன் தேவனைத் தொழ ஆரம்பித்தான்.  அவரை நமஸ்கரிக்கவும்¸ சேவிக்கவும் ஆரம்பித்தான்;  அவரை நோக்கிக் கூப்பிட ஆரம்பித்தான்.  அப்படித் தொழுதுகொள்ளும்பொழுது அவனுக்குத் தேவசமூகம் கிட்டியது.

நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிற போதெல்லாம் அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறது போல¸ தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?” (உபாகமம் 4:7).

தேவனோடு சஞ்சரித்த ஏனோக்கு!

ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது¸ மெத்தூசலாவைப் பெற்றான்.  ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின்¸ முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்து¸ குமாரரையும் குமாரத்திகளையும் பெற் றான்.  ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.

ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணப் படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.” (ஆதியாகமம் 5: 21-24)

பக்தியுள்ள சந்ததியில்¸ ஏனோஸின் நான்காம்  தலை முறையில் பிறந்தவர் ஏனோக்கு.  இவர் இவருடைய முன்னோர்கள் எல்லோரையும்விட மிகவும் பக்தி நிறைந்தவராயிருந்தார். 

இந்த ஏனோக்கு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுக் குமாரரையும்¸ குமாரத்திகளையும் பெற்றாலும்¸ தேவனோடு நெருங்கிய ஐக்கியம் கொண்டிருந்தார்.  தேவனுக்குப் பிரியமானவராய்க் காணப்பட்டார்.  ஆகவே தேவன் அவரை இந்த உலகை விட்டு மரணம் ஏற்படாமலேயே எடுத்துக்கொண்டார்.

ஆதாம் (930)¸ ஆபேல் என்பவர்களுடைய மரணங் களுக்குப் பின்பு¸ மரணத்தைக் காணாமலேயே எடுத்துக் கொள்ளப்பட்டவர் இந்த ஏனோக்கு தான்.  இவருக்குப் பின்னர் இந்தப் பூமியிலே மனிதர்கள் மிகவும் பலுகிப் பெருகத் தொடங்கினார்கள்.  அப்பொழுது பாவமும்¸ அவபக்தியும் மனிதர் களுக்குள் அதிகம் காணப்பட்டது.

நீதிமானாகிய நோவா!

பாவம் நிறைந்த பூமியில்¸ ஏனோக்குடைய மூன்றாம் தலை முறையில் தேவன் ஒரு நீதிமானைத் தோன்றப்பண்ணினார்.  அவர்தான் நோவா.  நோவா என்றால் ஆற்றுகிறவன் (ஆறுதல் செய்கிறவன்) என்று அர்த்தம்.  

ஆதாமின் பாவத்திற்குப் பின்¸ பாவத்தின் விளைவாக வந்த சாபத்தினால் பூமி தன் பலனைக் கொடாமலிருந்தது.  பூமியின்மேல் மழை பெய்யாதிருந்தது. அப்படிப்பட்ட வருத்தத்தின் மத்தியில் பிறந்தவர்தான் நோவா.  ஆனால்¸ அவருடைய பெயருக்கேற்ப அவர் அவருடைய பெற்றோர்களுக்கும்¸ அவருடைய சந்ததிக்கும்¸ இந்த முழு உலகத்திற்குமே ஆறுதலைக் கொண்டு வந்தார்.

நோவா அக்காலத்திலே வாழ்ந்த மனிதர்களுக்குள் (பாவம் பெருகின நாட்களிலுள்ளவர்களில்) பக்திமானும்¸ நீதிமானுமாயிருந்தார். மனிதர் களுக்குள் பக்தி குறைந்து¸ பாவம் பெருகினபடியினாலே¸ தாம் உண்டாக்கின மனு வர்க்கத்திற்காய்த் தேவன் மனஸ்தாபப்பட்டார்.  

மனிதன் நிமித்தம்; முழு உலகத்தையும்¸ அதிலுள்ள சகல ஜீவராசிகளையும் தண்ணீரினால் அழிக்கத் தேவன் தீர்மானித்தார். ஆனால்¸ நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.  அவனையும் சேர்த்து நீரில் அழிப்பதில் தேவனுக்கு விருப்பமில்லை.

நோவாவுடைய நாட்களில்தான் அவருடைய முன்னோர் களில் (பக்திமான்கள்) அநேகர் மரித்திருக்கின்றனர்.  அவருடைய முற்பிதாக்களாகிய ஏனோஸ் (905) முதல் ஏனோக்கு (365) வரைக்கும் இந்தக் காலக்கட்டத்தில்தான் மறைந்திருக்கிறார்கள்.  நோவாவுக்குக் குமாரர்கள் பிறந்த பிறகு¸ அவருடைய தகப்பனார் லாமேக்கும் (777) மரித்தார்.  அவருடைய தாத்தா மெத்தூசலா மட்டும் உயிரோடு இருந்தார்.

Friday, 4 February 2022

தேவ பக்தியுள்ள சந்ததி by Sis. Prema Vijay

தேவ பக்தியுள்ள சந்ததி!

"அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே.  பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே" (மல்கியா 2:15).

கர்த்தர் உங்களை கணவன், மனைவியாக, குடும்பமாக ஏற்படுத்தியிருப்பதற்கு ஒரு முக்கியமான நோக்கம் உண்டு.  நீங்கள் பிள்ளையைப் பெற்றுவிட அல்ல.  தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படி அவர் விரும்புகிறார். 

நீங்கள் நீதிமானுடைய சந்ததி என்றும் கர்த்தருடைய பிள்ளைகள் என்றும் அழைக்கப்படுகிறார்களா?  உங்களுக்கு பிள்ளைகள் பிறக்கும்போது, அவர்கள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டும்.

இந்த உலகத்தில் புறஜாதி மக்களும்,  கர்த்தரை அறியாதவர்கள், கிறிஸ்துவை எதிர்ப்பவர்களும், துன்மார்க்கர்களும், கொலையாளி களுமாயிருக்கிறார்கள். அவர்கள் தேவ பக்தியற்ற துன்மார்க்க சந்ததியை உருவாக்குகிறார்கள்.

ஆனால் நீங்களோ, பக்தியுள்ள சந்ததியைப் பெறவேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார்.  உங்களுடைய குடும்பம் கூனி, குறுகி போய்விட ஆண்டவர் விடுவதில்லை.

நீங்கள் பலுகிப்பெருகினால், சுவிசேஷமும் பெருகும்.  கோணலும், மாறுபாடுமுள்ள இந்த சந்ததியிலே, கர்த்தர் உங்களுடைய குடும்பத்தை தெரிந்தெடுத்து, மேன்மைப்படுத்தியிருக்கிறார். உங்களுடைய குடும்பம் கர்த்தரை பிரியப்படுத்துகிறதாகவும், நேசிக்கிறதாகவுமிருக்கட்டும்.  

கர்த்தர்தாமே உங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து தேவ பக்தியுள்ள சந்ததியாக பழுகி பெறுகச் செய்வாராக.  ஆமென் அல்லேலூயா!!

"இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்; கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்"  (சங்கீதம் 127:4).

 GOD BLESS YOU!


Mrs. Prema Vijay, 

EL-SHADDAI MINISTRY,

Jeeva Nagar, Coimbatore