தேவ பக்தியுள்ள சந்ததி!
"அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே" (மல்கியா 2:15).
கர்த்தர் உங்களை கணவன், மனைவியாக, குடும்பமாக ஏற்படுத்தியிருப்பதற்கு ஒரு முக்கியமான நோக்கம் உண்டு. நீங்கள் பிள்ளையைப் பெற்றுவிட அல்ல. தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படி அவர் விரும்புகிறார்.
நீங்கள் நீதிமானுடைய சந்ததி என்றும் கர்த்தருடைய பிள்ளைகள் என்றும் அழைக்கப்படுகிறார்களா? உங்களுக்கு பிள்ளைகள் பிறக்கும்போது, அவர்கள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டும்.
இந்த உலகத்தில் புறஜாதி மக்களும், கர்த்தரை அறியாதவர்கள், கிறிஸ்துவை எதிர்ப்பவர்களும், துன்மார்க்கர்களும், கொலையாளி களுமாயிருக்கிறார்கள். அவர்கள் தேவ பக்தியற்ற துன்மார்க்க சந்ததியை உருவாக்குகிறார்கள்.
ஆனால் நீங்களோ, பக்தியுள்ள சந்ததியைப் பெறவேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். உங்களுடைய குடும்பம் கூனி, குறுகி போய்விட ஆண்டவர் விடுவதில்லை.
நீங்கள் பலுகிப்பெருகினால், சுவிசேஷமும் பெருகும். கோணலும், மாறுபாடுமுள்ள இந்த சந்ததியிலே, கர்த்தர் உங்களுடைய குடும்பத்தை தெரிந்தெடுத்து, மேன்மைப்படுத்தியிருக்கிறார். உங்களுடைய குடும்பம் கர்த்தரை பிரியப்படுத்துகிறதாகவும், நேசிக்கிறதாகவுமிருக்கட்டும்.
கர்த்தர்தாமே உங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து தேவ பக்தியுள்ள சந்ததியாக பழுகி பெறுகச் செய்வாராக. ஆமென் அல்லேலூயா!!
"இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்; கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்" (சங்கீதம் 127:4).
GOD BLESS YOU!
Mrs. Prema Vijay,
EL-SHADDAI MINISTRY,
Jeeva Nagar, Coimbatore
0 comments:
Post a Comment