Thursday, 12 June 2025

Verses of Praise and Worship (in Tamil)!

1.  எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டவதாக. நீர் ஒருவரே கர்த்தர் (God, the Creator) - நெகேமியா 9:5, 6

2.  கர்த்தாவே, தேவரீர் (God, the Creator), மகிமையையும்  கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது. (வெளி. 4:11)

3. எங்கள் தேவனுக்குத் (God, the Father) துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும்  கனமும் வல்லமையும்  பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக! (வெளி. 6:12)

4.  இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய (El-Olam) சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் (El-Shaddai) பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்! (வெளி. 4:8)

5.  நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது  இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு (God, the Father) முன்பாக நம்மை ராஜாக்களாகவும் ஆசாரியர்களுமாக்கி அவருக்கு (God, the Son) மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக! (வெளி. 1:6)

6.  வழுவாதபடி எங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே எங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய எங்கள் இரட்சகரான தேவனுக்குக் (God, the Savior) கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக! (யூதா 24, 25)

7.  அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் (God the Son) வல்லமையையும் ஐஸ்வரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறீர்! (வெளி. 5:12)

8.  இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் எங்கள் தேவனுக்கும் (God the Father) ஆட்டுக்குட்டியானவருக்கும் (God the Son)  உண்டாவதாக!  (வெளி. 7:10)

9.  சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கும் (God the Father)  ஆட்டுக்குட்டியானவருக்கும் (God the Son) ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக!  (வெளி. 5:13)

10.  தேவரீர் (God, the Judge) புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் (God, the Son) அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்கு (God, the Father) முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்!  (வெளி. 5:9, 10)

11.  இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய (El-Olam) சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே (El-Shaddai), உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் (God, the King) உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்! (வெளி. 11:17)

12.  சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே (El-Shaddai), தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே (God, the King), தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின!  (வெளி. 15:3, 4)

13.  அல்லேலுயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே (God, the Judge) உரியது; அவருயை நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். (வெளி. 19:1)

0 comments:

Post a Comment