அத்தியாயம் 2
(இயேசு கிறிஸ்துவின் அதிசய பிறப்பு!)
“ஆதியிலே வார்த்தை இருந்தது¸ அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது¸ அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
அவருக்குள் ஜீவன் இருந்தது¸ அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.” (யோவான் 1:1-5)
ஆதியிலே வார்த்தை இருந்தது என்ற வசனம் யோவான் சுவிசேஷம் முதலாம் அதிகாரத்தில் வருகிறது. யோவான் சுவிசேஷம் எல்லா ஜனங்களும் இயேசுவை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்ட புத்தகம் ஆகும்.
யோவான் என்ற சீஷன் இயேசுவை ஆதியில் பிதாவோடு (அகிலத்தையும் சிருஷ்டித் தவர்) இருந்தவராகக் கண்டார். ஆதி என்ற பதத்திற்கு ஆரம்பம் என்று பொருள். அது இந்த உலகம் தோன்றின காலகட்டத்தைக் குறிக்கிறது. இந்த உலகம் தோன்றி சுமார் ஆறாயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.
இயேசு மனிதனாய் அவதரித்து ஈராயிரம் ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனால் அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்¸ தேவனா யிருந்தார். ஆதியிலே தேவன் வானத்தையும்¸ பூமியையும்¸ அதிலுள்ள குடிகளையும் சிருஷ்டித்தபொழுது இயேசுவும் அங்கே இருந்தார். ஆம்¸ இயேசுவின் மூலமாய்த்தான் இந்த உலகமும்¸ அதிலுள்ள யாவும் உண்டாக்கப்பட்டது.
“ஆதியிலே தேவன் வானத்தையும்¸ பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும்¸ வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது...” (ஆதியாகமம் 1:1¸ 2).
இந்த உலகத்தைச் சிருஷ்டிப்பதற்குத் தேவன் தம்முடைய வார்த்தையை ஆதாரமாகப் பயன்படுத்தினார் என்று ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் பார்க்கிறோம். ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்த இந்தப் பூமியை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவன் தம்முடைய வார்த்தையை உபயோகித்தார்.
வார்த்தை என்பது ஒருவரது எண்ணம் மற்றும் சிந்தையின் வெளிப்பாடாகும். வார்த்தையின் மூலமாக நாம் நம்முடைய எண்ணங்கள்¸ திட்டங்கள்¸ கருத்துக்கள்¸ கட்டளைகள்¸ மற்றும் விருப்பங்களை வெளிப்படுத்துகிறோம். அதைப்போலவே காணக் கூடாத மிகப்பெரிய இறைவன் தன்னுடைய வல்லமையை¸ உருவாக்கும் சக்தியை¸ ஆற்றலை வெளிப்படுத்தத் தன்னுடைய வார்த்தையைப் பயன்படுத்தினார். அந்த வார்த்தைதான் இயேசு.
ஞானமாயிருந்த இயேசு!
“கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் (ஞானமாகிய இயேசு) தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார். பூமி உண்டாகுமுன்னும்¸ ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன். ஆழங்களும்¸ ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும்¸ குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்¸ அவர் பூமியையும் அதின் வெளிகளையும்¸ பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்கு முன்னும் நான் ஜநிப்பிக்கப் பட்டேன்.
அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்¸ உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து¸ சமுத்திரத்தின் ஊற்றுக்களை அடைத்துவைக்கையிலும்¸ சமுத்திர ஜலம் தன் கரையைவிட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு¸ பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்¸ நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்;
நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியா யிருந்து¸ எப்பொழுதும் அவர் சமூகத்தில் களிகூர்ந்தேன். அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு¸ மனுமக்களுடனே மகிழ்ந்துகொண்டிருந்தேன்.” (நீதிமொழிகள் 8:22 - 31)
இந்த வசனங்களில் ஆண்டவராகிய இயேசுவை ஞானத்திற்கு ஒப்பிட்டுச் சொல்லப் பட்டிருக்கிறது. பிதாவாகிய தேவன் இந்த உலகத்தைச் சிருஷ்டிப்பதற்கு¸ அதை வடிவமைப்பதற்குத் தம்முடைய ஞானத்தைப் பயன்படுத்தினார். அந்த ஞானம்தான் இயேசு. ஆதியிலே – அதாவது சிருஷ்டிப்பின் நாளிலே இயேசு பிதாவோடுகூட அவருடைய ஞானமாக¸ வார்த்தையாக இருந்து சிருஷ்டிப்பிலே பங்கு பெற்றார்.
பிதா தம்மை வெளிப்படுத்த¸ தம்முடைய சிருஷ்டிப்பின் வேலையைச் செய்துமுடிக்க தன்னுடைய பிள்ளையாகிய இயேசுவை — ஞானமும்¸ வார்த்தையுமாய் இருந்த அவரைப் பயன்படுத்தினார்.
மானிடனான இயேசு!
“அந்த வார்த்தை மாம்சமாகி¸ கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்த வராய்¸ நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.” (யோவான் 1:14)
ஆதியிலே வார்த்தையாய்¸ ஞானமாய் இருந்த இயேசு¸ மாமிசத்தில் வெளிப்பட்டார் (மனிதனானார்). அதுதான் கிறிஸ்துமஸ். இயேசு என்ற பெயருக்கு இரட்சகர் என்பது பொருள். அதாவது மனிதனின் பாவங்களைப் போக்கி அவனைக் காப்பவர் என்பது அதின் அர்த்தம். இயேசு நம்மைப் பாவத்திலிருந்தும்¸ சாபத்திலிருந்தும்¸ வியாதியிலிருந்தும் விடுவித்துக் காக்கவே மனிதனாக அவதரித்தார்.
அவரைக் குறித்து வேதம் இவ்வாறாகச் சொல்லுகிறது: “உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார்¸ உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று¸ உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார்¸ அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவருடைய நாமத்தின்மேல் விசுவாச முள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ¸ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி¸ அவர்க ளுக்கு அதிகாரங்கொடுத்தார்.” (யோவான் 1:9-12)
ஆம்¸ இயேசு உலகத்திற்கு ஒளியா யிருக்கிறார். இருள் என்பது இந்த உலகத்தில் காணப்படுகிற பாவம்¸ சாபம்¸ அநியாயம்¸ அக்கிரமம் மற்றும் மனிதனைக் கெடுக்கக்கூடிய அத்தனை செயல்களையும் குறிக்கிறது. இயேசுவை நம்பி அவரை தெய்வமாக ஏற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் வெளிச்சமாக இருக்கிறார். அவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறார்¸ சாபங்களை மாற்றுகிறார்¸ வியாதி மற்றும் வேதனைகளை நீக்கிப்போடுகிறார்.
0 comments:
Post a Comment