Monday, 19 November 2018

ஆசீா்வாதமான கிறிஸ்தவ வாழ்வு!

ஆசீா்வாதமான கிறிஸ்தவ வாழ்வு என்னும் இப்புத்தகம் பூமிக்குாிய நம்முடைய வாழ்வை நாம் எங்ஙனம் நமக்கும், பிறருக்கும் பிரயோஜ‌னமுள்ளதாய் வாழமுடியும் என விளக்குகிறது. 

இப்புத்தகத்தில் நம்முடைய அன்றாடக வாழ்வில் வரக்கூடிய சோதனைகள், தடைகள், கடன் என்னும் பிரச்சனை, தீமையான காாியங்கள் போன்றவற்றை எங்ஙனம் மேற்கொள்ளுவது என்பதை உண்மைச் சம்பவங்கள் மற்றும் வேத ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. மேலும், பொிய காாியங்களைச் சாதித்தல், முதிா்வயதிலும் ஆசீா்வாதமாய் இருத்தல், மரணபயத்தை மேற்கொள்ளுதல் போன்ற காாியங்கள் இப்புத்தகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகத்தை எழுதிய டேவிட் லிவிங்ஸ்டன் அவா்கள் பகுதி நேரமாகத் தேவனுடைய ஊழியத்தைச் செய்துவருகிறாா். மாணவா்கள் மத்தியில் கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்துவரும் இவா் சுவிசேஷம் அறிவித்தல் மற்றும் வேதவசனத்தைப் போதித்தல் போன்ற ஊழியங்களைச் செய்துவருகிறாா். இப்புத்தகம் இவரது இலக்கியப் பணியில் நான்காவது படைப்பாகும்.

Preview of the Book is available here

To buy it online at NotionPress.com click here.

To purchase online at Pothi.com click here.

0 comments:

Post a Comment