வெட்கப்படுவதேன்?
(சாது சுந்தர் சிங் சொன்ன சின்னக் கதை!)
ஓர் ஏழைப் பெண்மணி, கொடிய துக்கத்தோடு கூக்குரலிட்டு அழுதாள். அவள் கணவன் இம்மையை விட்டுப் பிரிந்ததே அவளை வெகுவாக வாட்டியது.
அவள் கணவனின் உடல் கட்டைகளின் மேல் எரிந்துகொண்டிருந்தது.
"என்னையும் எரித்துப்போடுங்கள்" என்று அழுது, அக்கினித் தழலுக்கு நேராக ஓடினாள்.
சுற்றிலும் நின்ற மக்கள் வேடிக்கைப் பார்த்தனர். சிலர் பரிகாசம் செய்தனர்.
எனினும் கணவன் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பினால் சிறிதும் வெட்கப்படாதிருந்தாள்.
அப்பொழுது நான் எனக்குள் இவ்வாறு நினைத்தேன் : "அந்த ஏழைப்பெண், தன் கணவனுக்காக வெட்கப்படவில்லையே! நான் மட்டும் கர்த்தருக்காகத் துன்பம் அனுபவிப்பதில் வெட்கப்படுவதேன்?"
0 comments:
Post a Comment