Welcome to FutureForU Literature Service!

"There is surely a future hope for you, and your hope will not be cut off." (Proverbs 23:18)

The main motive of "FutureForU Literature Service" is to reach every person individually for Christ through literature. All the articles and resources available in this blog will help its visitor to have a bright future by knowing God and his ways.

Friday, 27 November 2020

நன்மை¸ தீமை!

அத்தியாயம் 3

(தேவ பக்தியும்¸ அவ பக்தியும்!)





“பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ¸ மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப் போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து¸ புசித்து¸ என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று¸
அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.

அவர் மனுஷனைத் துரத்திவிட்டு¸ ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல் செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும்¸ வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்” (ஆதியாகமம் 3: 22-24).

தேவன் மனிதனுக்கு முன்பாக இரண்டு காரியங்களை வைத்தார்: ஒன்று ஜீவன்¸ மற்றொன்று மரணம்.  இரண்டையும் கனிகளாய் மரங்களிலே அவனுக்கு முன்பாக வைத்தார்.  மேலும்¸ அவனுக்கு சுயமாய் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலையும் கொடுத்திருந்தார். ஆனால்¸ மனிதன் தெரிந்து கொண்டது ஜீவனையல்ல் மரணத்தையே.

ஜீவ விருட்சத்தின் கனியைப் பறித்துப் புசித்திருந்தால் ஆதாம் மரணத்தைக் காணாமல் என்றென்றும் வாழ்ந்திருக்கலாம்.  மாறாக¸ ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்து மரணத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

ஆவி¸ ஆத்துமா¸ சரீரம்:

ஆதாமை தேவன் உண்டாக்கினபொழுது அவனுக்குள் ஆவி¸ ஆத்துமா¸ சரீரம் என்று மூன்று ஆள்தத்துவங்கள் காணப்பட்டது.  ஏனென்றால் அவன் தேவனுடைய சாயலின்படியேயும்¸ தேவனுடைய ரூபத்தின்படியேயும் உண்டாக்கப்பட்டவன்.  ஆவி மற்றும் ஆத்துமா இவ்விரண்டும் சரீரத்திற்குள் மறைந்திருக்கின்றன. எனவே¸ அதை உள்ளான மனிதன் என்றழைக்கிறோம்.  வெளிப்புறத்திலுள்ள சரீரம் மாம்சத்தினாலும் இரத்தத்தினாலும் உருவான ஒன்றாயிருக்கிறது.

சரீரமாகிய வெளிப்புற மனிதன் ஆவியையும்¸ ஆத்துமாவையும் உள்ளடக்கிய ஒரு கூடாரம் போலக் காணப்படுகிறான். மனிதன் கீழ்ப்படியாமையினாலே மரணத்தை ஏற்றுக்கொண்ட உடனே¸ உள்ளான மனிதனில்தான் உடனடியான மரணம் நேரிட்டது.  சரீர மரணம் ஏற்பட நாட்கள் சென்றது.  இதை ஆதியாகமம் 5-ஆம் அதிகாரம் 4¸ 5 வசனங்களில் காணலாம்:

“ஆதாம் சேத்தைப் பெற்றபின்¸ எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து¸ குமாரரையும் குமாரத்தி களையும் பெற்றான்.  ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்;  அவன் மரித்தான்.”

நன்மை தீமை அறிகிற அறிவு:

நன்மையை மட்டுமே அறிந்தவனாய் உண்டாக்கப்பட்ட மனிதன்¸ நன்மை தீமை அறியத் தக்க விருட்சத்தின் கனியைப் பறித்துப் புசித்தபடியினாலே¸ தீமை இன்னதென்று அறிந்துகொண்டான். நன்மை தீமை இரண்டையும் செய்யக் கற்றுக்கொண்டான்.  நன்மையைவிடத் தீமையையே பற்றிக் கொள்ளுகிறவனாகக் காணப்பட்டான்.

ஆதாம் பாவஞ்செய்த பின்பு¸ ஆதாமிடமும் அவன் சந்ததியிடமும் தேவன் எதிர்பார்த்தது என்னவென்றால்: நன்மை தீமை அறியத்தக்க அறிவுடைய மனிதன் தீமையை வெறுத்து நன்மையைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதே.  ஆனால்¸ மனிதன் நன்மையைவிட தீமையையே தெரிந்துகொள்ளுகிறவனாயிருந்தான்.  ஆதாமின் குமாரனாகிய காயீனின் வாழ்க்கையில் இதை நாம் காணலாம்.  ஆதியாகமம் 4-ஆம் அதிகாரம் 6¸ 7 வசனங்களில் இவ்வாறு வாசிக்கிறோம்:

“அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று?  உன் முகநாடி ஏன் வேறுபட்டது?  நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ?  நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்…”

காயீன் ஆபேலைக் கொலை செய்வதற்கு முன்பாகவே தேவன் இந்த வார்த்தைகளை அவனோடு பேசியிருந்தார். ஆனால்¸ அவனோ நன்மை செய்வதை விட்டுவிட்டு கொலை என்கிற தீமையைத் தெரிந்துகொண்டான்.  தன் தம்பியாகிய ஆபேலைக் கொலை செய்ய சமயம் தேடினான்.  அவன் வயல்வெளியில் தனித்திருக்கும் சமயத்தில் அவனுக்கு விரோதமாக எழும்பி அவனைக் கொலைசெய்தான் (ஆதியாகமம் 4:8).

அதுமட்டுமல்ல¸ “ஆபேல் எங்கே?” என்று தேவன் கேட்டபொழுது¸ அவன் எங்கேயென்று எனக்குத் தெரியாது; நான் அவனுக்குக் காவலாளியோ? (ஆதியாகமம் 4:9) என்று கேட்டான்.  தன் சகோதரனைக் காத்து அவனுக்கு நன்மை செய்யவேண்டிய காயீன் அவனுக்கு விரோதமாய் எழும்பி அவனுக்குத் தீமைசெய்தான்.  ஆகவே¸ தேவனிடத்திலிருந்து சாபத்தைப் பெற்றுக்கொண்டான்.

Saturday, 14 November 2020

பக்தியுள்ள முதல் குடும்பம்!

அத்தியாயம் 2 

(தேவபக்தியுள்ள சந்ததி!)

"தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டு வந்து¸ அதைப் பண்படுத்தவும்  காக்கவும் வைத்தார்.

தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.

ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.  பின்பு¸ தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல¸ ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்" (ஆதியாகமம் 2:16-18)

தேவன் ஆதாமை உண்டாக்கி¸ அவனை ஏதேன் என்னும் தோட்டத்தில் வாழவைத்தார்.  அந்தத் தோட்டத்தில் அவனுக்குத் தேவையான சகலவிதமான கனிதரும் மரங்களையும் நாட்டியிருந்தார்.  அதோடுகூட தோட்டத்தின் நடுவிலே இரண்டுவிதமான மரங்களையும் வைத்திருந்தார்.  அதில் ஒன்று ஜீவவிருட்சம்; மற்றொன்று நன்மை தீமை அறியத்தக்க மரம்.

இப்படிப்பட்ட கனி விருட்சங்கள் நிறைந்த அந்தத் தோட்டத்தைப் பண்படுத்திப் பாதுகாக்கும் பணியை அவனுக்குக் கொடுத்தார்.  அதுமட்டுமல்ல¸ தான் உண்டாக்கின பறவைகள்¸ மிருகங்கள்¸ ஊரும் பிராணிகள்¸ கடல்வாழ் ஜந்துக்கள் ஆகிய யாவற்றையும் ஆளுகின்ற அதிகாரத்தையும் அவனுக்குக் கொடுத்தார்.

மேலும்¸ தேவன் ஆதாமுக்கு அவன் கைக்கொள்ளும்படிக்கு ஒரே ஒரு கட்டளையையும் கொடுத்தார்.  அந்தக் கட்டளை என்னவென்றால்¸ தோட்டத்திலுள்ள சகல கனிகளையும் அவன் பறித்துப் புசிக்கலாம்.  ஆனால்¸ அந்ததத் தோட்டத்தின் நடுவிலுள்ள மரமாகிய நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை மாத்திரம் அவன் புசிக்கக்கூடாது என்பதுதான்.  அதைப் புசிக்கும் நாளிலே அவன் சாகவே சாவான் என்பதாகவும் கூறினார்.

தாம் உண்டாக்கிய மனிதனாகிய ஆதாம் தனிமையாய் அந்தத் தோட்டத்தில் இருப்பது நல்லதல்ல என்று தேவன் கண்டு¸ அவனுக்கு ஒரு துணையை (பெண்ணை) அவன் விலா எலும்பிலிருந்து உண்டாக்கினார்.  அவள்தான் ஏவாள்.  அவளே ஜீவனுள்ள மனிதர்கள் அனைவருக்கும் தாயானவள்.  அவள் மூலமாய் இந்த உலகத்தில் சந்ததிகள் தோன்ற ஆரம்பித்தன.

ஆதாமும் ஏவாளும் தங்கள் இல்லற வாழ்க்கையை ஏதேன் தோட்டத்தில் சந்தோஷமாய் ஆரம்பித்தனர்.  ஒவ்வொருநாளும் அதிகாலையில் தேவனோடு உறவாடி மகிழ்ந்தனர்.  தேவ பக்தியுள்ள நல்ல குடும்பமாகத் திகழ்ந்தனர்.

ஒருநாள் ஏதேன் தோட்டத்திற்குள் சாத்தான் என்கிற சத்துருவானவன் பாம்பின் மூலமாக நுழைந்தான்.  தோட்டத்தின் ஒரு பகுதியில் ஏவாள் தனித்திருந்த பொழுது¸ அவளோடு பேசத்தொடங்கினான்.  அவளைத் தன் பொய் வார்த்தைகளினால் மயங்கப்பண்ணினான்.

சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட அந்தப் பெண் தேவன் புசிக்கவேண்டாம் என்று விலக்கின நன்மை தீமை அறியத்தக்க கனியைப் பறித்துப் புசித்து¸ தன் கணவனுக்கும் கொடுத்தாள்.  ஆதாமும் அதை வாங்கிப் புசித்து தேவனுடைய கட்டளையை மீறினான்; தேவனுக்குக் கீழ்ப்படியாமற்போனான். பக்தியுள்ள அந்த முதல் குடும்பத்திற்குள் பாவம் பிரவேசித்தது.


ஸ்திரீயின் வித்து:

“அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய்¸ நீ உன் வயிற்றினால் நகர்ந்து¸ உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; 

உனக்கும் ஸ்திரீக்கும்¸ உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார்¸ நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.” (ஆதியாகமம் 3: 14¸15)

பக்தியுள்ள குடும்பத்தை (ஆதாம் - ஏவாள்) பாவத்திலே விழத்தள்ளி தேவனுடைய திட்டத்தைக் குலைத்துப்போட சாத்தான் முயன்றான். ஆனால்¸ நம் தேவன் அனந்த ஞானமுள்ளவர்.  பாவத்தினால் நுழைந்த அவபக்தியை நீக்குவதற்காகத் தேவன் ஒரு திட்டத்தை வைத்திருந்தார்.  அதுதான் “ஸ்திரீயின் வித்து.

மனிதனை உண்டாக்கின தேவன்¸ தானே ஒரு மனிதனாகக் கன்னியின் வயிற்றில் உற்பவித்துப் பிறந்து¸ மனிதனின் மீறுதலினால் வந்த பாவத்தைத் தன்மேல் ஏற்றுக்கொண்டு¸ மனிதனுக்குப் பாவமன்னிப்பையும்¸ பரிசுத்தத்தையும்¸ மெய்யான தேவபக்தியையும் கொடுப்பதே அத்திட்டம்.

பாவஞ்செய்த பின்னர்¸ தேவன் ஆதாமையும்¸ அவன் மனைவியாகிய ஏவாளையும் தோட்டத்திலிருந்து வெளியேற்றினார்.  ஏனென்றால் நன்மை¸ தீமை அறியத்தக்க கனியைப் புசித்து சாவை ஏற்றுக்கொண்ட மனிதன் அந்தத் தோட்டத்தின் நடுவிலுள்ள ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்துப் புசித்து என்றென்றும் தீமை செய்கிறவனாய் வாழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும்¸ தேவனுடைய சமூகத்திலிருந்து (பிரசன்னத்திலிருந்து) அவர்கள் முழுவதுமாகத் தள்ளப்படவில்லை.  ஆனாலும்¸ பாவத்தினிமித்தம் முன்புபோல் தேவனோடு அவர்களால் உறவாட முடியவில்லை.  தேவனை விட்டு சற்றே தூரமாய்ப் போய்விட்டார்கள்.  பாவம் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே பிரிவினையை உண்டுபண்ணிற்று.  ஆகவே¸ பக்தி குறையத்தொடங்கியது.


காயீன்¸ ஆபேல்:

“ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்;  அவள் கர்ப்பவதியாகி¸ காயீனைப் பெற்று¸ கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.

பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான்¸ காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.”  (ஆதியாகமம் 4: 1¸2)

பாவத்தின் விளைவினால் ஆசீர்வாதத்தையும்¸ தேவனோடு உள்ள நித்திய உறவையும் இழந்த மனிதனாய் ஆதாம் தன் குடும்ப வாழ்வை இந்தப் பூமியிலே தொடர ஆரம்பித்தான்.  ஆதாமுக்குக் குமாரர்கள் பிறந்தார்கள்.  அவர்கள் பெயர் காயீன்¸ ஆபேல் என்பன.  காயீன் மூத்தவன்¸ ஆபேல் இளையவன். காயீனுக்குள் அவபக்தி காணப்பட்டது. ஆனால்¸ ஆபேலோ தேவபக்தியுள்ளவனாகக் காணப்பட்டான்.

ஒருநாள் அவர்கள் இருவரும் தேவனுக்கு நன்றிக் காணிக்கை படைக்க வந்தார்கள்.  தேவன் ஆபேலையும்¸ அவன் காணிக்கையையும் அங்கீகரித்தார்.  ஆனால் காயீனை அவர் அங்கீகரிக்கவில்லை. ஏனென்றால் அவனுடைய இருதயம் தேவனுக்கு முன்பாக செம்மையானதாக இருக்கவில்லை.

தன்னையும் தன் காணிக்கையையும் தேவன் அங்கீகரிக்காததை காயீன் கண்டபோது¸ அவனுக்குள் எரிச்சல் ஏற்பட்டது.  அவன் தன் தம்பியாகிய ஆபேலைப் பகைத்தான்.  பின்பு ஒருநாள் அவர்கள் இருவரும் தனித்திருக்கையில்¸ காயீன் ஆபேலுக்கு விரோதமாக எழும்பி அவனைக் கொலை செய்தான்.

Richard Baxter Born to Preach and Write

WHEN RICHARD BAXTER WAS BORN in Shropshire, England, on 12 November 1615, the state of religion in England was low.  In Baxter’s birth-town Eaton-Constantine, the gospel was poorly read and seldom preached.  He would set a different standard when he became a pastor. 

But at first that seemed far off.  As a youth he was a liar and a thief consumed with pride, frivolity, and disobedience.  His father had become a Christian through reading the Bible and led a more godly life than most of the pastors for miles around. He tried to guide his son to do the same. 

Baxter's early schooling, however, proved not to be the best way to lead him to Christ.  His schoolmasters were ministers who “read Common Prayer on Sundays and Holy Days, and taught school and tippled (drank) on the week-days, and whipped the boys, when they were drunk.”  However, when Baxter was about fifteen, someone loaned his father Bunny’s Resolution, a serious call to Christian living which Baxter read.  He came under the conviction of sin, began to pray, read other Christian books, and changed direction. He studied to become a pastor. About that time he also started coughing up blood, an indication of tuberculosis. 

In 1641 Baxter became a pastor at Kidderminster.  He preached God’s Word and took care to visit each person in the town and speak to them about their sin.  The transformation of the place was astounding.  Bible reading, praise, and prayer replaced cursing, sexual immorality, and drunkenness.  The church had to be enlarged five times. 

He wrote The Reformed Pastor, explaining his methods to others.  In a typical sermon he said, “It is a thousand pities that when God has provided a savior for the world, and when Christ has suffered so much for their sins...that yet so many millions should everlastingly perish because they made light of their savior and salvation and prefer the vain world and their lusts before them.” 

During the seventeenth century, King and Parliament went to war with each other.  Kidderminster was in a Royalist county, so Baxter, who sympathized with the Puritans, was driven out.  He became chaplain to parliamentary (Puritan) soldiers.  However, he did not get on well with Oliver Cromwell, the leader of the Puritans. 

Baxter was persecuted by both sides in the religious and political quarrels of the day and went to prison several times.  Nonetheless, his one hundred and twenty eight books had a strong influence on the nation. The best-known of these was The Saints’ Everlasting RestIt held out the hope of eternal life as a strong motivation for Christian living. 

Keep “heaven in your eye at all times,” he said.  Another book, Call to the Unconverted, exhorted readers to turn from sin to a holy life.  Its success led him to write a series of books designed to bring people to repentance and to set themselves apart for God’s use. 

He and his younger wife practiced what they preached, always helping others even though they were very poor themselves. In their last imprisonment together, Baxter’s wife shared a cell with him and died first.  His own death came in 1691.

Dan Graves

Sunday, 1 November 2020

News Update from Every Home for Christ

Today is the International Day of Prayer for Persecuted Christians.

Every day, our teams do outreach in dangerous nations. They risk attack, arrest, and even death for the sake of the gospel. It can be hard for us to picture what life is like for believers in these contexts, so we asked some of our leaders in these nations to share.

From the Middle East:

"One brother who partners with us was wrongly jailed on a false charge for about 10 months... He was targeted because of his testimony for the Lord, but was arrested on a false and unrelated charge… It was only after he changed his lawyer that he was released from prison. He was never found guilty of any crime."

From North Africa:

"A man, for his faith in Christ, was stoned to death after being locked up and starved for 40 days without food... More recently, a young boy who believed in Christ was sentenced to death by hanging by Sharia court."

From North Africa:

"One new believer is experiencing persecution for her faith... Her parents prevent her from having contact with Christians. They often threaten to kill her."

Why would Christians continue to share the gospel in such a threatening environment? They do it because the gospel is the power of God that brings salvation (Romans 1:16). It is the only hope that people have to be rescued from their sins — the only message that points them to Jesus.

Since last year, more than 8 million people have responded to Jesus in nations closed to the gospel.

These people are why our brothers and sisters risk so much to share the message. To them, the gospel is worth the persecution they face. To us, it is worth supporting them.