Welcome to FutureForU Literature Service!

"There is surely a future hope for you, and your hope will not be cut off." (Proverbs 23:18)

The main motive of "FutureForU Literature Service" is to reach every person individually for Christ through literature. All the articles and resources available in this blog will help its visitor to have a bright future by knowing God and his ways.
Showing posts with label சின்ன சின்னக் கதைகள். Show all posts
Showing posts with label சின்ன சின்னக் கதைகள். Show all posts

Sunday, 15 July 2018

வெட்கப்படுவதேன்?

வெட்கப்படுவதேன்?

(சாது   சுந்தர்  சிங்  சொன்ன சின்னக்  கதை!)


ஓர்  ஏழைப்  பெண்மணி, கொடிய  துக்கத்தோடு  கூக்குரலிட்டு  அழுதாள்.  அவள் கணவன்  இம்மையை  விட்டுப்  பிரிந்ததே  அவளை வெகுவாக  வாட்டியது.

அவள்  கணவனின்  உடல்  கட்டைகளின் மேல்  எரிந்துகொண்டிருந்தது.

"என்னையும்  எரித்துப்போடுங்கள்" என்று  அழுது, அக்கினித்  தழலுக்கு  நேராக  ஓடினாள்.

சுற்றிலும்  நின்ற  மக்கள்  வேடிக்கைப்  பார்த்தனர்.  சிலர்  பரிகாசம்  செய்தனர்.

எனினும்  கணவன் மீது  கொண்டிருந்த  அளவற்ற  அன்பினால்  சிறிதும்  வெட்கப்படாதிருந்தாள்.


அப்பொழுது  நான்  எனக்குள்  இவ்வாறு  நினைத்தேன் :  "அந்த  ஏழைப்பெண்,  தன்  கணவனுக்காக  வெட்கப்படவில்லையே!   நான் மட்டும்  கர்த்தருக்காகத்  துன்பம்  அனுபவிப்பதில்  வெட்கப்படுவதேன்?"

--  நன்றி  ஆர். எஸ். ஜேக்கப்

Friday, 13 July 2018

கால தாமதமேன் ?

கால  தாமதமேன் ?

ஆர். எஸ். ஜேக்கப்

அழகான  ஒரு  மலர்.  அதனை  உற்று நோக்கி , "அது  எப்படி  வளர்கிறது?  அதனுள்  என்னென்ன அடங்கியிருக்கிறது? என்பன  போன்ற  ஆய்வுகளைச்  செய்ய  அதிக  ஆண்டுகள் ஆகும்.

ஆனால் ...

அம்மலரின்  நறுமணத்தை  முகர்ந்து  அனுபவிக்க  சிறு  பொழுது  போதும்.

அதுபோலவே...

 கடவுளை  அறிந்து  உணர  காலதாமதம்  தேவையில்லை.

--  நன்றி  "சாது   சுந்தர்  சிங்  சொன்ன  சின்ன  சின்னக்  கதைகள்  100"